இந்தியா

ஒரு நொடில மரணம் வர போகுதுனு அந்த இளைஞருக்கு அப்போ தெரியாது!! மின்கம்பியில் சிக்கிய பறவையை மீட்கச்சென்றபோது நடந்த சோகம்..

Summary:

மின்கம்பியில் சிக்கியிருந்த பறவையை மீட்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ப

மின்கம்பியில் சிக்கியிருந்த பறவையை மீட்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மால்பூர் தாலுகாவில் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடை வீதிக்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த மின்கம்பி ஒன்றில் பறவை சிக்கி உயிருக்கு போராடியுள்ளது.

இதனை பார்த்த அந்த இளைஞர், சற்றும் யோசிக்காமல் கீழே கிடந்த குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு மின்கம்பம் மீது ஏறி அந்த பறவையை விடுவிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த குச்சியை ஓங்கி மின்கம்பத்தில் அடித்தபோது எதிர்பாராத விதமாக அந்த இளைஞர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில் நிலைகுலைந்து அந்த இளைஞர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருந்தநிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தி வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.


Advertisement