இந்தியா

நெஞ்சு வலியில் கதறிய பயணி! தரையிறங்கிய விமானம்! அடுத்தடுத்து நடந்த சோகம்.

Summary:

Flight passenger dead while flying

நேற்று நள்ளிரவு சுமார் 00: 15 மணியளவில் கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத்திற்கு  ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி -406 என்ற விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளனர்.

இதனை அடுத்து 00:31 மணியளவில் விமானம் இந்தூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டு இந்தியா விமான நிலையத்தின் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மருத்துவரின் உதவியுடன் குறிப்பிட்ட பயணியை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பயணியின் நிலை மிக மோசமாக இருந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக இந்தூர் எம். ஒய் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவி வைத்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குறிப்பிட்ட பயணி இறந்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement