தவறான தகவல்களை பகிர்ந்தால் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.! பேஸ்புக் நிறுவனம் அதிரடி.!

தவறான தகவல்களை பகிர்ந்தால் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.! பேஸ்புக் நிறுவனம் அதிரடி.!



facebook restriction

தவறான தகவல்களை மீண்டும் மீண்டும் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறான தகவல்களை பதிவிடுவோருக்கு, அதை பதிவு செய்ததற்காக எச்சரிக்கை செய்தி அனுப்பும் வழக்கம் பேஸ்புக்கில் இருக்கிறது. தற்போது இந்த எச்சரிக்கைக்கு அடுத்தபடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து பேஸ்புக் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பூசி மற்றும் பாதிப்பு, பருவநிலை மாற்றங்கள், தேர்தல் போன்ற தீவிரத்தன்மை மிகுந்த தகவல்களை தவறாக பகிரும் நபர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட அந்த பயனாளரின் பதிவுகள், வெகுஜன மக்களை அடையாதபடி நாங்கள் பார்த்துக்கொள்வோம். 

face book

ஏற்கனவே குறிப்பிட்ட பதிவு தவறானது என்பது எங்களுக்கு தெரியவந்தால், அந்த ஒரு பதிவு மேற்கொண்டு பயனாளர்களை அடையாமல் இருக்க வழிமுறைகளை செய்திருக்கிறோம். இப்போது அதன் அடுத்தகட்டமாக பயனாளரின் பிற பதிவுகளும் வராமல் தடுக்கிறோம்.

ஒவ்வொரு பேஸ்புக் பக்கத்திற்கும் அதன் தவறான தகவல்களின் எண்ணிக்கை அல்லது விவரங்கள் பயனாளிகளுக்கு காண்பிக்கப்படும். அதன் மூலம் அப்பக்கததை பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும். மத்திய அரசு அமல்படுத்திய புதிய விதிமுறையை ஏற்பதாக பேஸ்புக் கூறியிருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.