இந்தியா வீடியோ

தன்னை வளர்த்த பாகனை கொஞ்சி அரவணைப்பதற்காக குட்டியானை செய்த சிலிர்க்கவைக்கும் காரியம்! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

Summary:

elephant play happily with their Pagan

தற்காலத்தில் மனிதர்கள் சிலர் தான் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக சுயநலத்துடன் பலரையும் ஏமாற்றி வருகின்றனர். ஆனால் எப்பொழுதுமே மனிதர்களை விட நாம் செல்லமாக வளர்த்துவரும் பிராணிகள் என்றுமே உண்மையான அன்புடனும், நன்றியோடும் இருக்கும். மேலும் அவை தங்களை வளர்பவர்களை ஒருபோதும் விட்டுகொடுப்பதில்லை.

இவ்வாறு தாய்லாந்தில் அமைந்துள்ள மோ சா யானைகள் முகாமில் 20 வயதில் குட்டி யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த யானையை மிகவும் அன்புடன் பாகன் ஒருவர் பராமரித்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அந்த யானைபாகன் தடுப்பு வேலிக்கு பெயிண்ட் அடித்துகொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அதன் அருகே மற்றொரு தடுப்பு கம்பிகள் கொண்ட கூடாரத்தின் உள்ளே குட்டி யானை அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகனை கண்ட அந்த யானை அவரை கொஞ்ச அவரை கட்டி அரவணைக்க முயற்சி செய்கிறது. 

ஆனால் அந்த பாகன் யானையின் அழைப்பை கவனிக்காமல், தொடர்ந்து பெயிண்ட் அடிப்பதில் மும்முரமாக இருக்க யானை தடுப்புகம்புயை தாண்டி வெளியே வரமுயற்சி செய்துள்ளது. பின்னர் தடுப்பிற்கு இடையே துதிக்கையை நுழைத்து அவரை கொஞ்சி அரவணைக்கிறது. இந்த நெகிழ்ச்சியான வீடியோவை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்யசபா எம்பி பரிமல் நாத்வானி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement