இந்தியா லைப் ஸ்டைல்

முதலையுடன் யானை நடத்திய கொடிய யுத்தம்!! அடுத்து என்ன நடந்தது என்பதை பாருங்க..

Summary:

முதலையுடன் யானை நடத்திய கொடிய யுத்தம்!! அடுத்து என்ன நடந்தது என்பதை பாருங்க..

தனது குட்டியை காப்பாற்றுவதற்காக முதலையை கொலை செய்த யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நீர்நிலைகளில் வசிக்கும் கொடிய விலங்குகளில் ஒன்று முதலை. தப்பி தவறி முதலையின் கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் அதனை அடித்து, தண்ணீருக்குள் இழுத்துச்சென்று அதனை தனக்கு இரையாக்கிவிடும்.

அந்தவகையில், யானை குட்டி ஒன்றை விழுங்க நினைத்த முதலையை, யானைக்குட்டியின் தாய் மிதித்தே கொலை செய்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. யானை கூட்டம் ஒன்று நீர் அருந்த சென்றபோது, அங்கிருந்த முதலை ஒன்று யானை கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்றை விழுந்த முயற்சித்துள்ளது.

இதனை பார்த்த தாய் யானை, மிகவும் ஆக்ரோஷத்துடன் அந்த முதலையுடன் சண்டை போட்டு தனது குட்டியை காப்பாற்றியுள்ளது. அதுமட்டும் இல்லாமல், அந்த முதலை சாகும்வரை அதனை தனது காலாலும், துதிக்கையாலும் அடித்து மிதித்து கொலை செய்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement