இந்தியா

தண்ணீருக்காக வந்து கால்நடைகளை புரட்டியெடுத்த யானைக்கூட்டம்.. பதறிப்போன மக்கள்.!

Summary:

தண்ணீருக்காக வந்து கால்நடைகளை புரட்டியெடுத்த யானைக்கூட்டம்.. பதறிப்போன மக்கள்.!

கிராமத்திற்குள் காட்டு யானைகள் கூட்டம் தண்ணீருக்காக படையெடுத்து வந்த நிலையில், கால்நடைகளை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் மான்யம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. இதன் காரணமாக மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கோடை வெயில் காலம் என்பதால் தண்ணீருக்காக யானைகள் பல இடங்களிலும் சுற்றித் திரியும் நிலையில், கிராமங்கள் மற்றும் பயிர்நிலங்கள் உள்ள இடங்கள் தண்ணீர் தேடி வருகின்றன.

இந்த நிலையில், காட்டு யானைகள் கூட்டம் கால்நடைகளை தாக்கியதை தொடர்ந்து, அதில் சிறிய கன்று ஒன்று உயிரிழந்துள்ளது. இதனால் மிகவும் பீதியடைந்த கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கிராமத்தில் முற்றுகையிட்ட காட்டு யானைகளை விரட்டும் தீவிரபணியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், 'தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாகவும், முழுவதுமாக காட்டு யானைகள் வெளியேறும் வரை வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவேண்டாம்' என்றும் கூறியுள்ளனர்.


Advertisement