அரசியல் இந்தியா

ஷாக் நியூஸ்...! கர்நாடக மாநில துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.!

Summary:

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா தனது வீட்டில் இருந்து காரில் வெளியே சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்களும் உதவியாளர்களும் அவரை தேடினர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது  உடல் சிக்கமகளூரு மாவட்டத்தின் கதூர் தாலுகாவில் குணசாகரா பகுதியில் கண்டெடுக்கபட்டது. 

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலை குறித்து தர்மேகவுடா கடிதம் எழுதி வைத்து இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தர்மேகவுடாவின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த இவர் தேவகவுடாவின் தீவிர விசுவாசியாக திகழ்ந்தார். இந்தநிலையில் தர்மே கவுடா மறைவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பொதுவாழ்வில் போற்றத்தக்க வகையிலும், அமைதியான முறையிலும் நடந்துகொண்டவர் தர்மேகவுடா என தேவகவுடா புகழாரம் சூட்டியுள்ளார்.


Advertisement