இந்தியா லைப் ஸ்டைல்

வைரல் வீடியோ: ஆமையை விழுங்க முயன்ற முதலை.! இறுதியில் என்ன ஆனது தெரியுமா? வீடியோ இதோ.

நீரிலிருந்து வெளியே வந்த முதலை ஒன்று நிலத்தில் இருந்த ஆமை ஒன்றை விழுங்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வருவாய் துறை அதிகாரிகளில் ஒருவரான Naveed Trumboo என்பவர் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுமார் 18 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் பெரிய முதலை ஒன்று ஆமை ஒன்றை விழுங்க முயற்சிக்கிறது.

அந்த வீடியோ காட்சியில் அருகில் இருக்கும் நீரிலிருந்து வெளியே வந்த முதலை ஒன்று நிலத்தில் இருந்த ஆமை ஒன்றை விழுங்க முயற்சிக்கிறது. முதலையின் வாயில் சிக்கிய ஆமை முதலையின் வாயிலிருந்து வெளியே விழுந்தபிறகும் மீண்டும் மீண்டும் முதலை அந்த ஆணையை பிடித்து விளங்குகிறது.

இறுதியில் ஆமை முதலையிடம் இருந்து தப்பி அங்கிருந்து நகர்கிறது. இதுவரை 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement