ஐந்துவருட காதல்! எமனாக வந்த போட்டோஷூட்! காதல் கைகூடும் நேரத்தில் உயிரிழந்த இளம் ஜோடி



couple-drowns-on-pre-wedding-photo-shoot

திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது மணமகளும், மணமகனும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்கள் திருமணங்களின் வழக்கமான அம்சமாக மாறியுள்ளன. இந்நிலையில் கர்நாடகக மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் தம்பதியினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்துவந்தநிலையில் அவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் வரும் நவம்பர் 22 ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டிற்காக இளம் தம்பதியினரின் குடும்பத்தினர், போட்டோகிராபர், இளம் தம்பதியினர் அனைவரும் டி நரசிபுராவின் தலகாடு அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று அவர்கள் படகு மூலம் ஆற்றுக்குள் சென்றுள்ளனர்.

dead

தம்பதியினரின் குடும்பத்தினர். போட்டோகிராப்பர் என அனைவரும் மற்றொரு படகில் இருந்தநிலையில் தம்பதியினர் பயணித்த படகு திடீரென ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டு மூழ்கியுள்ளது. இதில் தம்பதியினர் இருவரும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர். படகை ஓடியவர் சாமர்த்தியமாக நீந்தி தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளம் தம்பதியினரின் உடலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.