இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை! வெளியான அதிர்ச்சி தகவல்!



Corona increased in tamilnadu

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,109 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 62,939 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,109 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 62,939 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

corona

இந்தியாவில் கடந்த 100 நாட்களில் கொரோனாவால் சுமார் 63 ஆயிரத்திற்கும் மேலானோர்  பாதிப்படைந்துள்ளனர். 2,100-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 3,277 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 128 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,939 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கையும் 2,109 ஆக உயர்ந்துள்ளது. 19,358 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.