இந்தியா

காரின் மேற்கூரையில் தொங்கிய சடலம்.. 10 கி.மீ. பயணம் செய்த கார்.. பஞ்சாபில் நடந்த சோக சம்பவம்..

Summary:

பஞ்சாபில் காரின் மேற்கூரையில் சடலத்துடன் பயணம் செய்த கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ள

பஞ்சாபில் காரின் மேற்கூரையில் சடலத்துடன் பயணம் செய்த கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் மொஹாலி அருகே அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, சாலை ஓரமாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சைக்கிளில் சென்றவர் கார் மோதிய வேகத்தில் மேலே தூக்கிவீசப்பட்டு காரின் மேற்கூரையில் விழுந்து இறந்துள்ளார்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல், தொடர்ந்து ஓடிச்சென்றுள்ளார். மேற்கூரையில் சடலத்துடன் 10 கிலோமீட்டர் தூரம் பயணித்து, பின்னர் உடலை வீசி விட்டுச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்த போலீசார், காரை ஓட்டிச்சென்ற நிர்மல் சிங் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது கொலை இல்லாத மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் ழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் இந்த sசம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement