இந்தியா

என்ன ஒரு மனிதநேயம்! கர்ப்பிணி பெண்ணுக்கு உதவ ஆட்டோ டிரைவர் செய்த துணிச்சலான செயல்

Summary:

Auto driver drive on platform to help pregnant lady

மும்பை விரார் ரயில் நிலையத்தில் 7 மாத கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆட்டோ டிரைவர் ஒருவர் ரயில் நிலைய பிளாட்பார்மில் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் மும்பை ரயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது பெய்த மழையின் காரணமாக ரயில் விரார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 

அப்போது அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிய கணவர் உதவிக்காக வெளியில் சென்று சத்தமிட்டுள்ளார். அப்போது கவாத் என்ற ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார்.

நிலையை உணர்ந்து கொண்ட அந்த ஆட்டோ டிரைவர் உடனடியாக தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு ரயில் ப்ளாட்பாரத்தில் ஓட்டி சென்றார். பின்னர் கர்ப்பிணி பெண்ணை ஏற்றிய அவர் அருகில் இருந்த சஞ்சீவினி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 

ஆனால் விதியை மீறி ரயில் நிலைய பிளாட்பார்மில் ஆட்டோவை ஓட்டிச் சென்றதால் ஆட்டோ டிரைவரை போலிசார் கைது செய்தனர். பின்னர் ட்ரைவரை கண்டித்து விடுதலை செய்துள்ளனர். 


Advertisement