முன்னால் எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை; கொரோனாவை போல வேகமாக பரவும் எச்3என்2 வைரஸ்..!!

தற்போது பரவி வரும் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் கொரோனா வைரஸ் போல வேகமாக பரவக்கூடியது என்று முன்னாள் எய்ம்ஸ் இயக்குனர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக ஐசிஏஆர் தெரிவித்துள்ளது. முன்னாள் ஏய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரசானது, எச்1என்1 வைரசின் மாறுபாடு அடைந்த வைரஸ் என்று கூறியுள்ளார். காய்ச்சல், இருமல், சளி, தொண்டைப்புண் போன்றவை இதன் அறிகுறிகள் என்று தெரிவித்தார். எச்3என்2 வைரஸ் கொரோனோ போல வேகமாக பரவும் தன்மை உடையது என்று கூறியுள்ளார்.
மேலும், முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், வயதானவர்கள், இதற்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்வது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.