சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் அதிசய நாய்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!



a-stray-dog-has-been-following-a-group-of-13-ayyappa-de

கார்த்திகை மாதம் வந்தாலே உலகின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் ஐயப்ப சாமிக்கு விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்வது வழக்கம். உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ஆண்டு தோறும் பலலட்சம் பேர் பாதயாத்திரையை சென்று ஐயப்ப சாமியை தரிசனம் செய்கின்றனர்.

ஐயப்ப சாமியை தரிசிக்க தற்போதுவரை ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளது. இதுஒருபுரம் இருக்க, ஆந்திரா மாநிலத்தில் இருந்து 13 பக்தர்கள் மாலை அணிவித்து நடைப்பயணமாகச் சபரிமலைக்கு புறப்பட்டுள்ளனர்.

Mystry

திருமலையில் இருந்து கேரளாவில் இருக்கும் ஐயப்ப சாமியை தரிசிக்க நடந்தே செல்வதாக இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இவர்களது நடை பயணம் முடிவடைய சுமார் ஒரு மாதம் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் 13 பக்தர்களும் தங்களது நடைப்பயணத்தை தொடங்கிய சில மணி நேரங்களில் அந்த பகுதியில் இருக்கும் நாய் ஓன்று அந்த பக்தர்களுடன் சேர்ந்து அதுவும் நடக்க தொடங்கியுள்ளது.

நாய் சிறிது தூரம் வரும் பிறகு சென்றுவிடும் என அவர்கள் நினைத்த நிலையில் அந்த நாய் தொடர்ந்து அந்த பக்தர்களுடன் பயணம் செய்துவருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.