அமெரிக்கா உட்பட இந்தியாவிடம் உதவி கேட்டு நிற்கும் 30 உலக நாடுகள்..! என்ன விஷயம் தெரியுமா.?

அமெரிக்கா உட்பட இந்தியாவிடம் உதவி கேட்டு நிற்கும் 30 உலக நாடுகள்..! என்ன விஷயம் தெரியுமா.?



30-countries-request-to-send-corono-tablets-to-their-co

கொரோனா சிகிச்சைக்காக பயன்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யுமாறு அமேரிக்கா உட்பட 30 உலக நாடுகள் இந்தியாவிடம் கோரிக்கைவைத்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிவருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியா காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுத்தப்படும்  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்தது. மேலும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த அறிவுரை வழங்கியுள்ளது.

corono

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு இந்த மாத்திரையை ஏற்றுமதி செய்துவந்த இந்தியா இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக பரிந்துரைக்கு பின் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதை கடந்த மாதம் 25-ம் தேதி தடைசெய்தது.

இதனால் பலநாடுகளில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகள் இந்தியாவிடம் மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என கோரிக்கைவைத்துள்ளது.

ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால்  உள்நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்தபிறகே மாத்திரைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யமுடியும் எனவும், இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுவருவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.