ஒரே மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய 3 இளைஞர்கள்.. விசாரணையில் வெளியான நம்ப முடியாத தகவல்கள்

ஒரே மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய 3 இளைஞர்கள்.. விசாரணையில் வெளியான நம்ப முடியாத தகவல்கள்


3 Youngsters commit suicide

மோட்சம் அடைய போவதாக நம்பி மூன்று இளைஞர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்ட்ர மாநிலம் ஷஹாபூர் வனப்பகுதியில் மூன்று இளைஞர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சட்டமாக மீட்கப்பட்டனர். மூன்று பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வாய்த்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்தி என்ற கிராமத்தை சேர்ந்த நிதின் பெரே, மஹேந்திர துபேல், முகேஷ் தவத் என்ற மூன்று இளைஞர்களும் அமாவாசை தினத்தன்று தாங்கள் மோட்சம் அடைய போவதாக நம்பி புடவையால் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த மூன்று பெற்றுத்தான் நான்காவதாக ஒரு நபரும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், அந்த நபர் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட மூவரும் சமபவத்தன்று அளவுக்கு அதிகமாக குடித்திருந்தநிலையில் இந்த முடிவை எட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.