ஆண் - பெண்ணுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட காரணங்கள் என்னென்ன?.. ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..!!

ஆண் - பெண்ணுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட காரணங்கள் என்னென்ன?.. ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..!!


Sterility reasons explained in tamil

ஆண் மற்றும் பெண்ணுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்த விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

பொதுவாகவே இடுப்புகுழி வீக்கம், கட்டிகள், கருப்பை மற்றும் கருப்பை உட்படல சுழற்சி போன்றவற்றால் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுகிறது. பெண்களின் உடலில் கொழுப்பின் அளவு குறைவதாலும், பசியின்மையாலும் கூட மலட்டுத்தன்மை ஏற்படும். 

இதற்கு காரணம் உடல் எடை கூடிவிடுமோ? என்ற பயத்தால் உணவு உண்பதில் ஏற்படும் மனக்கோளாறு ஆகும். தற்போதைய காலகட்டத்தில் வாழும் பெண்கள் உடல் எடை கூடிவிட்டால் என்ன செய்வது? என்ற மனநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதிலிருந்து பெண்கள் விடுபட்டாலே மலட்டுதன்மை ஏற்படாமல் தடுக்கலாம்.

sterlity reasons

மேலும் ஆண்களுக்கு ஜீன்ஸ் பேண்ட் போன்ற இறுக்கமான உடைகள் அணிவதால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிவதன் மூலம் வெப்பநிலை உயர்ந்து, விந்து செல் உற்பத்தியானது பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுகிறது.

அத்துடன் விந்து மற்றும் அண்டத்தின் குறைவளர்ச்சி காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படும். சில பெண்களில் தன் வாழ்க்கை துணையின் விந்து செல்களுக்கு எதிராக எதிர்ப்புபொருள் உருவாகுவது உண்டு. அதுபோலவே சில ஆண்களிலும் தங்களது சொந்த விந்து செல்களுக்கு எதிராகவே சுயதடைகாப்பு விளைவு உருவாகும். இவை இரண்டுமே இயற்கையாக உருவாகும் மலட்டுத்தன்மையாகும். இதனை சரி செய்வது மிகவும் கடிமையானது.