மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவளையம் வந்து முகம் அசிங்கமா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க கருவளையம் காணாம போயிடும்!

Summary:

How to remove black under eyes with home remedies

தான் பார்ப்பதற்கு அழகாக தோன்றுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது? பெண்களுக்கு நிகராக ஆண்களும் தங்களது அழகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். வாரண ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய சவாலாக இருப்பது அவர்கள் கண்களுக்கு கீழே உள்ள கருவாலயம்தான்.

கண்ணுக்குக் கீழ் கருவளையம் உண்டாகப் பல காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கிய காரணமாக இருப்பது ஓய்வின்மை, சரியான தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைவு இது போன்றவைகள் ஆகும்.


கருவளையம் வந்துவிட்டால் முகத்தின் பொலிவு முற்றிலும் போய்விடும். அவ்வாறு நம் முகத்தில் வந்துள்ள கருவளையங்களை பலவிதமான செயற்கை க்ரீம்களை கொண்டு மறைக்க முயல்வதை விட நம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை கொண்டே அவற்றை மறைய வைக்க முடியும்.

அப்படி வீட்டிலேயே கருவளையத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

தேங்காய் எண்ணெயில் மஞ்சள் குழைத்து, அதை வெதுவெதுப்பான சுட வைத்து குளிப்பதற்கு முன் தினமும் கண்களை சுற்றி பூசி 10 நிமிடம் கழித்து குளித்தால் கருவளையம் காணாமல் போகும்.

உருளைக்கிழங்கு இயற்கை வெளுக்கும் பண்புகள் உடையது. இது கருவளையங்களை போக்க வல்லது. இரவில் ஒரு சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கு சாறு எடுத்து கண்களுக்கு கீழ் 15 நிமிடங்கள் வைத்து பின் கழுவுதல் வேண்டும்.

பன்னீருடன் கடலைமாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுதல் வேண்டும், இதனை வாரம் இரு முறை செய்து வந்தால் கண்களின் கீழ் இருக்கும் தோலை சுலபமாக்குகிறது.

தக்காளியை ஒரு பசை போல் அரைத்து அதனை கண்களுக்கு கீழ் வைத்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுதல் வேண்டும். இப்படி செய்வதனால் தோல் மென்மையான மற்றும் பிரகாசிக்க உதவுகின்றது.

பாதாம் விட்டமின் ஈ கொண்டது, சிறிது பாதாம் எண்ணெயை கண்களின் கீழ் வைத்து மற்றும் மெதுவாக மசாஜ் செய்யவும். அதை ஒர் இரவு விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் கழுவுங்கள். கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் நாளடைவில் நீங்கும்.


Advertisement