பசியை தூண்டும் சத்தான கொத்தமல்லி புலாவ்.. இன்றே செய்து அசத்தலாம் வாங்க..!How to prepare Coriander pulav

பசியை தூண்டும் கொத்தமல்லி புலாவ் வீட்டிலேயே எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

கொத்தமல்லிக்கு பசியை தூண்டும் சக்தி உள்ளது. தினமும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாயு பிரச்சனையை சரி செய்ய இயலும்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2 

தக்காளி - 1 

பாசுமதி அரிசி - 2 கப் 

பூண்டு - 8 பல் 

பச்சை மிளகாய் - 5

இஞ்சி - 1 துண்டு

கொத்தமல்லி - 1 கட்டு 

எண்ணெய் - தேவைக்கேற்ப

பட்டை - 1

இலவங்கம் - 1

செய்முறை :

★முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ள வேண்டும். பின் அரிசியை நன்கு கழுவி கொள்ள வேண்டும்.

★அடுத்து சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

★அரைத்த விழுதை கழுவிய அரிசியில் போட்டு ஊறவைக்க வேண்டும்.

★பின் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, லவங்கம், பட்டை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். 

★வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதில் ஊறவைத்த அரிசி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

★இறுதியாக மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து விசில் வந்தவுடன் நறுக்கினால் கொத்தமல்லி புலாவ் தயாராகிவிடும்