சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி: அயலான் படத்தின் இசை வெளியீடு விழா அறிவிப்பு.!
13 மணி நேரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை; 30 வருட கனவை இழந்து நிற்கும் பெண்
13 மணி நேரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை; 30 வருட கனவை இழந்து நிற்கும் பெண்

திருமணம் செய்துகொள்ளும் எல்லோருக்கும் தன் துணையுடன் 20, 30 வருடங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கனவு இயல்பாகவே இருக்கும். ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை திருமணமான ஒரே நாளில் பறிபோனால் யாரால் தாங்கிக்கொள்ளமுடியும்.
அப்படி ஒரு நிலைமை தான் லண்டனில் ஒரு பெண்ணிற்கு வந்துள்ளது. திருமணமான 13 மணி நேரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கணவன், மனைவியின் கண்முண்ணே உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
லண்டனை சேர்ந்த மிச்செல் (32) என்ற பெண், திருமணமான 13 மணி நேரத்தில் தன்னுடைய கணவரை இழந்து வாடுகிறார். இந்த நிகழ்வை பற்றி அவர் கூறியிருப்பதாவது;
"நானும் என்னுடைய கணவர் ஸ்காட்ம் ஆன்லைன் இணையதளத்தின் மூலம் தான் சந்தித்தோம். அதன்பின்னர் மூன்று, நான்கு வாரங்களில் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது.
இதனையடுத்து இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தோம். இரண்டு வருடங்களாக எங்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில், திடீரென கடந்த 9-ம் தேதியன்று ஸ்காட்டிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
பின்னர் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொள்ளும்பொழுது, அவருக்கு புற்றுநோய் இருப்பதும், அது நான்காவது கட்டத்தை எட்டியிருப்பதும் தெரியவந்தது. இன்னும் எத்தனை மாதங்கள் உயிருடன் இருப்பார் என நான் மருத்துவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் அளித்த பதில், தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியது.
மாதங்கள் இல்லை. இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என கூறினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதலில் உறவினர்கள் எல்லோருக்கும் சொல்லிவிடுங்கள். அதற்கு முன்னதாக திருமணம் செய்யுங்கள் என மருத்துவர் கோரிக்கை விடுத்தார்.
அதனடிப்படையில் வேகவேகமாக திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தோம். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுவதை நாங்கள் புரிந்துகொண்டு, புதன்கிழமையன்று திருமணம் செய்துகொண்டோம்.
அவருடைய நண்பர்கள் உறவினர்கள் என அதிகமானோர் கலந்துகொண்டனர். அவர் நாற்காலியில் அமர்ந்தபடியே என்னை திருமணம் செய்துகொண்டார். அதுவரை பேச முடியாமல் இருந்த அவர், என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என கேட்டதும், அதிக சத்தத்துடன் சம்மதம் என கூறினார். இதை கேட்டு அங்கிருந்த அனைவருமே சிரித்தனர்.
பின்னர் தூங்க வேண்டும் என ஸ்காட் கூறியதும் அவரை தூங்க வைத்துவிட்டு அவரது அருகிலேயே இருந்தேன்.
அப்பொழுது தான் அவரது இறுதி கட்டம் நெருங்கிவிட்டது என்பது எனக்கு தெரியாது. அவரை எனது மடியில் அணைத்தவாறே, ‘ஒன்றுமில்லை பேபி. இப்போதைக்கு சென்று வா’ என தேற்றினேன் அடுத்த சில நிமிடங்களிலே அவர் உயிர் பிரிந்துவிட்டது.
அவரை திருமணம் செய்துகொண்டு 20, 30 வருடங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என கனவு கண்டிருந்தேன். ஆனால் அது 13 அம்மணி நேரத்திலே முடிந்துவிட்டது என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.