முன்னணி நடிகர்களை மிஞ்சி, புதிய அவதாரமெடுக்கும் யோகிபாபு.! இவ்வளவு தோற்றங்களில் அசத்தியுள்ளாரா!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களுள் தற்போது அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் யோகி பாபு. அஜித், விஜய் என் முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் யோகி பாபுவிற்கு தற்போது நிறைய படங்கள் கைவசம் உள்ளன. மேலும் அவர் காமெடி நடிகராகவும், பிரபல நடிகைகளை காதலிக்கும் மன்மதனாகவும், குழந்தைகளுக்கு பிடித்தமான நகைச்சுவை வேடங்களையும் ஏற்று தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் யோகிபாபு தற்போது புகழ்மணி இயக்கத்தில் உருவாகும் காவி ஆவி நடுவுல தேவி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் காதலர்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் யோகி பாபு 11 தோற்றங்களில் அவதாரமெடுத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில், கதாநாயகனாக ராம்சுந்தர் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, டைரக்டர் புகழ்மணி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகும் இந்த படத்தில் காதலர்களை பிரித்து வைப்பவராக மொட்டை ராஜேந்திரனும், மலையாள மந்திரவாதியாக இமான் அண்ணாச்சியும் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.