காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
பிரபுதேவாவுடன் இணைய போகும் அந்த பிரபலம் யார் தெரியுமா?
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னதாக வெளிவந்த படம் 60 வயது மாநிறம் இந்த படத்தில் நடிகர் விகாரம் பிரபு நடித்தார். நல்லதாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அனால் இவருக்கு ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தோல்வி படம் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இவர் துப்பாக்கி முனை, அசுரகுரு படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் அந்த இரண்டு படங்கள் முடித்தவுடன் வால்டர் என்ற படத்தில் அர்ஜூனுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது மூன்று பேரை மையப்படுத்தி எடுக்கப்படும் அருமையான கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜாக்கி செராப் ஆகியோர் அந்த 3 நபர்களாக நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக சதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ரத்தன் செயல்படுகிறார். மேலும் தயாரிப்பாளராக மதுக்கூர் மூவிஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.. இயக்குனராக யு. அன்பரசன் செயல்படுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, கும்பகோணம், தென்காசி, குற்றாலம் போன்ற பகுதிகளில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.