சினிமா

தந்தை மீது பண மோசடி புகார்! சூரியின் புகாருக்கு எதிராக பிரபல நடிகர் வெளியிட்ட பதிலடி அறிக்கை! ஷாக்கில் ரசிகர்கள்!

Summary:

தனது தந்தை மீது பணமோசடி புகார் அளித்த சூரிக்கு பதிலடி கொடுத்து நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. அவரது தரப்பிலிருந்து தற்போது 
 நிலம் வாங்கித் தருவதாக கூறி வீர தீர சூரன் படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் இருவரும்  2 கோடியே 70 லட்சம் ரூபாய் பெற்றுகொண்டு மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீரதீரசூரன் படத்தில் நடித்ததற்காக சூரிக்கு 40 லட்சம் சம்பள  பாக்கி வைத்திருந்ததாகவும் அதனை தர மறுத்த நிலையிலேயே நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்ததாகவும் கூறப்பட்டது. இவர்களில் ரமேஷ் என்பவர் நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பா. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் என் மீதும், என் தந்தை மீதும் வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை பற்றி படித்தது மிகவும் அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் உள்ளது. திரு சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்க்கு ஒரு அட்வான்ஸ் பணத்தை திருப்பி தரவேண்டும். கவரிமான் பரம்பரை என்ற படத்திற்காக கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் கைவிடப்பட்டது.

உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்து இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

 

 

 


Advertisement