
Vijays character and name in master movie leaked
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய். படம் அடுத்தமாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையியல், மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
படத்தின் கதை என்னவாக இருக்கும், படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் படம் பார்க்க இப்போதில் இருந்தே மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையியல், மாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் என்ன, படத்தில் அவரது கதாபாத்திரம் என்ன என்பது குறித்து புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
விஜய்யின் அடையாள அட்டை என கூறப்படும் அந்த புகைப்படத்தில், விஜய்யின் பெயர் ஜான் துரைராஜ் என்றும், St . Jeffery's கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் சங்கத்தின் டீன் எனவும் அந்த அடையாள அட்டையில் போடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கின்றார் என கூறப்பட்டுவந்த நிலையில், மாணவர் சங்கத்தின் டீனாக விஜய் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement