வாழ்க்கையில் என்னோட மாஸ்டர் இவர் மட்டுமேதான்! அட்டகாசமான பதிலால் அதிரவைத்த விஜய் சேதுபதி!



vijay-sethupathi-speech-in-master-audio-launch-UTHY6U

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று மிகவும் சிறப்பாக நடிக்க கூடிய விஜய் சேதுபதி, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் முதன்முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.  அப்பொழுது பேசிய விஜய் சேதுபதியிடம் விஜயுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை கூறினார்.

அதைத்தொடர்ந்து தொகுப்பாளர்கள் அவரிடம்  வாழ்க்கையில் உங்கள் மாஸ்டர்  யார்? சினிமாவில் உங்கள் மாஸ்டர் யார்? என கேட்டுள்ளனர். 

master

அதற்கு  அவர் வாழ்க்கை என்றால் எப்போதுமே எங்கப்பா தான் என்னோட மாஸ்டர். அப்பாவை அடித்துக்கொள்ள இந்த உலகத்தில் யாருமே இல்லை. தான் சம்பாதிக்கிற பணம், அறிவு அனைத்தும் முழுமையாக தன் பிள்ளைகளிடம் போய் சேர வேண்டும் என்று நினைப்பது அப்பா மட்டுமே. தான் பேசும் வார்த்தைகள் எல்லாம் பிடிக்கிறதோ இல்லையோ, பிள்ளைகளிடம் போய் சேருதோ இல்லையோ 1000 வார்த்தைகள் கொட்டுவார்கள். அது வாழ்க்கையில் என்றைக்காவது தடுக்கிவிழும் போது,  நமக்கு துணையாக வந்து நிற்கும். அதைத்தான் எங்கப்பா எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறார். அதனால் தான் இங்கு நிற்கிறேன். அவர் மட்டும்தான் என் மாஸ்டர், வேறு யாருமில்லை.

சினிமாவில் மாஸ்டர் , நான் சந்தித்த அனைத்து மனிதர்களும் தான். ஏனென்றால் கலை என்பது ரொம்ப பெரியது. அதில் சந்திக்கும் அனைத்து மனிதர்களுடமிருந்தும்,  சிறுசிறு வேலைகளிலிருந்தும் கற்றுக் கொள்கிறேன். நான் யார் எதை அழகாக செய்தாலும் ரசிப்பேன். இந்த உலகத்தை ரொம்பவே நேசிக்கிறேன். கடவுளைக் கொஞ்சம் தள்ளிவைத்துப் பார்க்கிறேன் என கூறியுள்ளார்.