இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்திய விஜய் பட வில்லன் நடிகர்.. போலீசார் விசாரணை!

ஹிந்தித் தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் அறிமுகமானவர் பூபேந்தர் சிங். 1998ம் ஆண்டு "ஷாம் கன்ஷாம்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து 1999ம் ஆண்டு தெலுங்கில் "தம்முடு" என்ற படத்தில் அறிமுகமானார்.
மேலும் சில தெலுங்குப் படங்களில் நடித்துள்ள பூபீந்தர் சிங், 2001ம் ஆண்டு விஜய், பூமிகா நடிப்பில் வெளியான "பத்ரி" திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். இதையடுத்து அஜித் நடித்த "வில்லன்" மற்றும் சரத்குமாரின் "திவான்" படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் இவருக்கு உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் ஒரு பண்ணைத் தோட்டம் உள்ளது. இதனருகில் குர்தீப் சிங் என்பவரின் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் தனது தோட்டத்தைச் சுற்றி முள்வேலி அமைக்க விரும்பி பூபேந்தர் அங்குள்ள மரங்களை வெட்ட முயன்றுள்ளார்.
அப்போது பூபேந்தருக்கும், குர்தீப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியது. அப்போது பூபேந்தர் தனது உதவியாளர்களுடன் சேர்ந்து குர்தீப்பின் குடும்பத்தினரைத் தாக்கியுள்ளனர். இதில் பூபேந்தர் துப்பாக்கியால் சுட்டதில் குர்தீப்பின் மகன் கோவிந்த்(22) உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.