அடேங்கப்பா..இது சூப்பர் தகவலாச்சே! பீஸ்ட் படத்தில் காத்திருக்கும் வேற லெவல் ஆச்சரியம்! கண்டிப்பா செம ஹிட்டுதான்!!

அடேங்கப்பா..இது சூப்பர் தகவலாச்சே! பீஸ்ட் படத்தில் காத்திருக்கும் வேற லெவல் ஆச்சரியம்! கண்டிப்பா செம ஹிட்டுதான்!!


vijay-going-to-sing-a-sivakarthickeyan-lyricist-song

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய்யின் 65வது படமான இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்காக அனிருத் மற்றும் நெல்சனின் நெருங்கிய நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு மாஸ் பாடலை எழுதியுள்ளாராம்.

vijay

 இதுவே ரசிகர்களுக்கு சூப்பர் தகவலாக இருந்த நிலையில் தற்போது புதிய உற்சாக செய்தி பரவி வருகிறது. அதாவது சிவகார்த்திகேயன் எழுதவிருக்கும் பாடலை அனிருத் இசையமைக்க தளபதி விஜய் பாட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைசாக அமைந்துள்ளது. மேலும் அந்த பாடல் செம ஹிட்டாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.