காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
300 கோடி பட்ஜெட்டில் தளபதி 68. ! ஹாட்ரிக் ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி விஜய்! வெளிவந்த மாஸ் தகவல்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் குஷ்பு, பிரகாஷ்ராஜ், சரத்குமார்,ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67 வது படத்தில் நடிக்கவுள்ளார். அப்படம் கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டது என கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்கான ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தளபதி 68வது படம் குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது. தளபதி விஜய் தன்னுடைய 68வது படத்தில் தெறி, மெர்சல், பிகில் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீயுடன் இணைகிறார் எனவும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.