கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன்! ஆனால்... இப்போது அதுதான் முக்கியம்! நடிகை வரலக்ஷ்மி ஓபன் டாக்!

கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன்! ஆனால்... இப்போது அதுதான் முக்கியம்! நடிகை வரலக்ஷ்மி ஓபன் டாக்!



Varalakshmi interview about danny movie and politics

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி கோரதாண்டவமாடி வருகிறது.  இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது நீட்டிக்கபட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, தியேட்டர்கள்  மூடப்பட்டுள்ளது. இதனால் தயாரான ஏராளமான படங்கள் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் போன்ற திரைப்படங்கள் ஓடிடி  இணையதளத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த டேனி திரைப்படமும் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜீ 5 இணையதளத்தில் வெளியாகவுள்ளது. 

varalakshmi

இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நடிகை வரலக்ஷ்மி பல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்பொழுது அவர், டேனி திரைப்படத்தில் நான் கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். மேலும் எனக்கு துணையாக, டேனி என்ற நாயும் நடித்துள்ளது. இங்குதான் இன்னாருக்கு முக்கியத்துவம் உள்ள கதை என பார்க்கிறார்கள். ஆனால், வெளிநாட்டில் அப்படி கிடையாது. கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

 மேலும் நான் ஏற்கனவே குறைவாகத்தான் சம்பளம் வாங்கி வருகிறேன். அதனால் கொரோனா பிரச்சினையால் தனியாக சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். ஆனால் தற்போதைக்கு கிடையாது. அப்பாவின் கட்சி தொடங்கி யாருடைய கட்சியிலும் கூட்டணியில்  இணைய வாய்ப்பில்லை. அரசியலுக்கு எந்தவித பயமும் இல்லாமல் குரல் கொடுப்பவர்கள்தான் தேவை.
தற்போது எனக்கு சேவ்சக்தி அமைப்புதான் முக்கியம். அதன்மூலம் என்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.