சினிமா

நடிகை டாப்சியிடம் இந்தியில் பேச சொல்லி வற்புறுத்திய நபர்! தக்க பதிலடி கொடுத்த நடிகை - வைரலாகும் வீடியோ.

Summary:

Topsy open talk

தமிழ் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை டாப்சி. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். 

ஆனால் அப்படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்காததால் தமிழில் படவாய்ப்புகள் குறைந்து விட்டன. எனவே பாலிவுட் பக்கம் சென்ற டாப்ஸி அங்கு தற்போது ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது ஒருவர் அவரிடம் இந்தி நடிகையாக இருந்து கொண்டு ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். 

அதற்கு அவர் அங்கு இருப்பவர்களை பார்த்து அனைவருக்கும் இந்தி தெரியுமா என கேட்டுள்ளார். அதற்கு சிலர் தெரியாது என பதில் அளித்துள்ளனர். உடனே டாப்ஸி நான் இந்தி நடிகை மட்டும் கிடையாது தென்னிந்திய நடிகை தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளேன். எனவே நான் தமிழில் பேசவா என கேட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார். 


Advertisement