சன்டிவி சீரியலில் மீண்டும் புதுமையை படைத்த திருமுருகன்! பாராட்டித்தள்ளும் தமிழக ரசிகர்கள்!



thirumurugan new try in kalyanaveedu serial


தமிழகம் மட்டும் இல்லாது இந்திய அளவில் மிக பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த பிரமாண்ட வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களில் ஓன்று அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்.  தற்பொழுது வரை தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான்.  

சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட, 'நாதஸ்வரம்' தொடருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.  அந்த சீரியல் இடைவேளை இன்றி, தொடர்ச்சியாக சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மெட்டி ஒலி சீரியல் மூலம் திருமுருகன் தமிழக ரசிகர்கள் நெஞ்சத்தில் இடம்பிடித்தார்.

Kalyana veetu

தென்மாவட்டங்களில் கோபிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்தநிலையில் சன்டிவியில் 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியல் மூலம் ஒரு புதுமையை நேற்றைய எபிசோடில் படைத்துள்ளார் திருமுருகன். 

நேற்றைய எபிசோட்டில் விளம்பர இடைவெளி இல்லாமல் சீரியல் ஒளிபரப்பானது. அதாவது காமிராவும் ஒரு கதாபாத்திரம் போல சீரியலில் வந்து ரசிகர்களை பிரிமிக்கவைத்தது. நேற்றைய எபிசோட்டை பார்த்தபிறகு சின்னத்திரையின் சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் திருமுருகன் என ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.