சினிமா

மலேசியாவில் தல அஜித் ரசிகர்களால் வைக்கப்பட்ட பிரமாண்ட கட்-அவுட் - புகைப்படம் உள்ளே!

Summary:

thala ajith

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.  இவர் நடிகர் என்பதை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் கெத்து காட்டுவார் தல அஜித்.

தல அஜித் அவர்கள் மிகவும் குழந்தை மனம் கொண்டவர்.அதுமட்டுமின்றி மிக எளிமையான குணம் படைத்தவர் என்பதால் இவருக்கு என்றே  தனி ரசிகர் பட்டாளங்கள் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றன.

அதிலும் மலேசியாவில் அஜித்திற்கு பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர், அவரின் வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்கள் அங்கு ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் வெளிவரவிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்திற்கு மலேசியாவில் 30 அடிக்கு கட்-அவுட் வைத்துள்ளனர்.அப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement