தல, மக்கள் செல்வனுடன் இணைந்து நடிக்க வேண்டும்; இந்த நடிகைக்கு ஆசைய பாத்தீங்களா.!

தல, மக்கள் செல்வனுடன் இணைந்து நடிக்க வேண்டும்; இந்த நடிகைக்கு ஆசைய பாத்தீங்களா.!


thala - makkal selvan - serusty denkey

தல அஜித், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று பிரபல நடிகை சிருஷ்டி டாங்கே தெரிவித்துள்ளார்.

நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் பட புகழ் கதிர் நடிக்கும் படம் சத்துரு இப்படத்தின் ஹீரோயினியாக பிரபல நடிகை சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இப்படம் கிரைம், திரில்லர் படமாக உருவாகியுள்ளது. 

Thala ajith

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய இயக்குனர் கூறுகையில், ‘இப்படத்தில் கதிர் போலீசாக நடித்துள்ளார். இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் படம். 

படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்லும். சிருஷ்டி டாங்கே ஷூட்டிங்கின் போது அளித்த ஒத்துழைப்பை மறக்கமுடியாது. பாடல் காட்சிக்காக நாயகி 20 காஸ்ட்யூம் மாத்தவேண்டியிருந்தது. புதுச்சேரி கடற்கரை பப்ளிக் டாய்லெட்டில் காஸ்ட்யூம் மாற்றி, நடித்தார்.’ என அவரை பாராட்டினார். 

Thala ajith

இந்நிலையில் நடிகை சிருஷ்டி டாங்கே அளித்த பேட்டி ஒன்றில், ‘‘நான் மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருந்தாலும், தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழியை நன்றாக கற்று கொண்டேன். 

தமிழ் நடிகர்களில் எனக்கு ‘தல’ அஜித், ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசை. அரசியல் ஆசை உண்டா என கேட்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசுபவள். எனக்கு அதெல்லாம் ஒத்து வராது. நூறு படங்கள் வேண்டாம், பத்து நல்ல படங்களில் நடித்தாலே போதும். தமிழ் மக்களின் ஆதரவு என்றும் தேவை’’ என்றார்.