சினிமா

அடேங்கப்பா.. அமிதாப் பச்சனை தொடர்ந்து கமலுக்காக கொல்கத்தா ரசிகர்கள் செய்த காரியம்! என்ன தெரியுமா??

Summary:

அடேங்கப்பா.. அமிதாப் பச்சனை தொடர்ந்து கமலுக்காக கொல்கத்தா ரசிகர்கள் செய்த காரியம்! என்ன தெரியுமா??

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து உலக நாயகனாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் கமல். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம்.

இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் கொல்கத்தாவில் கிதிர்பூர் நகரில் இருக்கும் கமல் ரசிகர்கள் அவருக்காக கோவில் ஒன்றை கட்டி வருகிறார்களாம். இந்த கோவில் குறித்து விக்ரம் வெளியாவதற்கு முன்பே திட்டமிடபட்ட நிலையில், விக்ரம் படம் வெற்றி பெற்றதும் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கோவிலை திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு கடிதம் மூலம் ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொல்கத்தாவில் ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர். இந்த நிலையில் கொல்கத்தாவில் தனக்காகப் கட்டப்பட்டுள்ள கோவிலை திறப்பதற்கு கமல்ஹாசன் செல்வாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Advertisement