அந்த கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன்.. நிச்சயம் பலிக்கும்.! நம்பிக்கையில் நடிகர் சூர்யா!!

அந்த கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன்.. நிச்சயம் பலிக்கும்.! நம்பிக்கையில் நடிகர் சூர்யா!!


Surya pray for vijayakanth

தமிழ் சினிமாவில் ஏராளமான ஆக்சன், மாஸ் திரைப்படங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் முன்னணி நடிகரும், தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கம்பீரமாக வலம் வந்த அவர், தொண்டர்களைக் கூட சந்திக்க முடியாமல் வீட்டோடு இருந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த் சளி மற்றும் இருமல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விஜயகாந்தின் உடல்நலம் குறித்து பல தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் விஜயகாந்த் நலமாக உள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என பிரேமா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

surya

இதனையடுத்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் விஜயகாந்த் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா, "அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன். கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்" என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.