2 திருமணம் நடந்தும் பிரயோஜனம் இல்லை.. மன உளைச்சலால் பைத்தியமானது தான் மிச்சம் - பிரபல நடிகை ஓபன்டாக்..!!
2 திருமணம் நடந்தும் பிரயோஜனம் இல்லை.. மன உளைச்சலால் பைத்தியமானது தான் மிச்சம் - பிரபல நடிகை ஓபன்டாக்..!!

தனது வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்து பிரபல நடிகை பேட்டி அளித்தார்.
தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு முரளி, மணிவண்ணன் வடிவேலு வினு சக்கரவர்த்தி உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் சுந்தரா ட்ராவல்ஸ். இந்த திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமாகி தமிழக மக்களின் வரவேற்பு பெற்றவர் ராதா.
இந்த படத்திற்கு பின்னர் இவர் நடித்த படங்கள் பெரிதளவு வெற்றியடையாத நிலையில், ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வந்தார். பின்னர் தயாரிப்பாளரை திருமணம் செய்து குழந்தைக்கு தாயானவர், சில வருடங்களிலேயே கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்தார்.
அப்போது எண்ணூர் காவல் நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வசந்த ராஜன் என்பவரோடு பழக்கமாகி, அவரையும் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். அடிக்கடி வசந்தராஜனுடன் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ராஜன் தன்னை சித்ரவதை செய்வதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையில், சமீபத்தில் அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சுந்தரா ட்ராவல்ஸ் படத்திற்கு பின்னர் நான் பெருமளவில் நடிக்கவில்லை. சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் நான் நடிக்க வந்தாலும் சுந்தரா ட்ராவல்ஸ் படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. அது எளிமையாக அமைந்தது.
சினிமாவில் அதிக ஈகோ இருக்கிறது. அதனால் நடிப்பதை விட்டுவிட்டு வந்து விட்டேன். நான் திருமண வாழ்க்கைக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததால், அப்போது அதனை அப்படியே கைவிட்டேன். எனக்கும் காதல் இருக்கிறது. அந்த காதலினால் பணம் உட்பட படவற்றையும் இழந்தேன்.
அதனை எனது மனதிற்குள் வைத்து சொல்லமுடியாமல் தவித்து மனஉளைச்சலுக்கு உள்ளானேன். சினிமாவில் இருந்த காரணத்தால் பல தகவல் வெளியே தெரிந்தது. இது மன சங்கடத்தையும் ஏற்படுத்தியது. தெரியாமல் சாக்கடைக்குள் காலை வைத்தேன், அந்த சூழ்நிலையில் நான் பித்துப்பிடித்தார் போலவும் இருந்தேன். அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வரை எனக்கு கடவுள் தான் சக்தி கொடுத்தார்" என பேசினார்.