சினிமா

அரை குரை ஆடையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுருதிஹாசன்

Summary:

sruthihasan in new look

நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று விஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கும் நமது கமலஹாசன் வெறும் நடிகர் மட்டும் அல்ல. மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் கூட. இவருக்கு சுருதிஹாசன், அக்ஷராஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இருவருமே தந்தையைப்போல சினிமாவிற்குள் வந்து தனி தனியாக கலக்கி வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் நாயாகியாக அறிமுகமானவர் சுருதிஹாசன். அதை தொடர்ந்து விஜய், அஜித், விஷால் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சுருதிஹாசன்.

சில நாட்களுக்கு முன்பு சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறைக்கான சிறந்த பெண்மணிக்கான விருதினை பாண்டிச்சேரி ஆளுநர் கிரண்பேடி அவர்களிடம் இருந்து பெற்றுள்ளார் நடிகை சுருதிஹாசன். மேலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'ஹலோ சகோ' என்னும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார் சுருதி. 

இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஆடையானது பார்ப்போர் பலரை முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு இருந்துள்ளது. அந்த ஆடையில் அவர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், ஒரு அரசியல் கட்சி தலைவரின் மகள், இந்த நாட்டை திருத்த துடிக்கும் ஒரு தலைவரின் மகள் என்ற முறையில் இனிமேலாவது நாகரிகமான உடை அணிந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.


Advertisement