ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
70 அரசுப்பள்ளி குழந்தைகள்! தமிழ் சினிமாவில் முதன்முறையாக, இதுவரை எந்த நடிகரும் செய்யாத விஷயம்! மாஸ் காட்டும் சூர்யா!
70 அரசுப்பள்ளி குழந்தைகள்! தமிழ் சினிமாவில் முதன்முறையாக, இதுவரை எந்த நடிகரும் செய்யாத விஷயம்! மாஸ் காட்டும் சூர்யா!

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஏர் டெக்கானின் நிறுவனரான ஜி.கே.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படம், வரும் 21 ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தின் முதல் பாடல் கடந்த ஜனவரி 24ஆம் தேதியன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இரண்டாவது பாடல் வெய்யோன் சில்லி புதுமையாக விமானத்தில் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும் அதற்காக ஆசைகள் மற்றும் கனவுகள் என்ற தலைப்பின் அடிப்படையில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளியை சேர்ந்த 70 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் இன்று ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 ரக விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து 45 நிமிடங்கள் வானில் பறந்த விமானத்தில் வெய்யோன் சில்லி பாடல் வெளியிடப்பட்டது. மேலும் அந்த விமானத்தில் இயக்குநர் சுதா கொங்கரா,நடிகர் சிவக்குமார், சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அரசு பள்ளியில் படிக்கும் சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றும்விதமாக முதன்முதலாக விமானத்தில் ஏற்றி அழகு பார்த்த சூரரைபோற்று படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.