சினிமா

ஹீரோ ஆவதற்கு முன் த்ரிஷாவுடன் சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்.! வைரல் வீடியோ.!

Summary:

Sivakarthikeyan vivel soap advertisement video

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்ளில் ஒருவராக மாறிவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியால் சினிமாவில் புகழின் உச்சத்தில் உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயலான், டாக்டர் போன்ற படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

சினிமாவில் ஹீரோ ஆவதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற தொடர் மூலம் பிரபலமானார் சிவகார்த்திகேயன். இதனை அடுத்து, அது இது எது, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற பலவேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இவர் பிரபல நடிகை த்ரிஷா நடித்த சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. நடிகைகள் த்ரிஷா, விஷாகா நடித்திருந்த விவேல் சோப்பு விளம்பரத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதோ அந்த வீடியோ.


Advertisement