அட்டகாசமான ஆக்சன் காட்சிகள்.. பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம்.. வெளியானது சலார் படத்தின் டிரைலர்..!
"எம். ஜி. ஆருக்கு அடுத்து நானா" யூ ட்யூப்பர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திகேயன்..
"எம். ஜி. ஆருக்கு அடுத்து நானா" யூ ட்யூப்பர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திகேயன்..

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். இவர் 2012ம் ஆண்டு வெளியான ' மெரினா ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "மாவீரன்" திரைப்படம் சர்வதேச அளவில் 80கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக கமலஹாசன் தயாரிப்பில் "எஸ்.கே.21" என்று தற்காலிக தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக இவர் நடிப்பில் உருவாகி வந்த "அயலான்" திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல், தற்போது பொங்கலுக்கு வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
நேற்று நடந்த இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவ கார்த்திகேயன், " ஏலியனை மையமாக வைத்து எம்.ஜி.ஆர் காலத்தில் ஒரு படம் எடுக்கப்பட்டதாக இயக்குனர் கூறினார். அதற்குப்பிறகு தற்போது நாங்கள் தான் அந்த முயற்சியை எடுத்துள்ளோம்" என்று கூறியுள்ளார். இதனால் யூ ட்யூபில் எம்ஜிஆருக்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று குறிப்பிட்டு விடாதீர்கள் காமெடியாக கூறியிருந்தார்.