காமெடி,ரொமான்ஸ், ஆக்சன் என எல்லாமே கலக்கலா இருக்கே... வெளியான டான் பட டிரைலர்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கல்லூரி கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள டான் படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்று முன்பு டான் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.