பிசினஸ்மேனாகிறார் நம்ம சூப்பர் ஹீரோ! புதிய ஹோட்டல்களை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!

பிசினஸ்மேனாகிறார் நம்ம சூப்பர் ஹீரோ! புதிய ஹோட்டல்களை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!


sivakarthickeyan-open-soori-hotel

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் சூரி. இவரது காமெடிகென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது பேச்சு,  உடல் அசைவுகள் என அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. 

பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் பெருமளவில் பிரபலமானார். அதன்பின்னர் அவர் விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திக்கெயன் என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

sori

இந்நிலையில் நடிகர் சூரி,  மதுரையில் 2017-ல் அம்மன் என்ற உணவகத்தை தொடங்கினார். அதற்கு மக்கள் கொடுத்த பெரும் ஆதரவை தொடர்ந்து அவர் தற்போது மதுரை அவனியாபுரம் ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் அம்மன் என்ற  சைவ உணவகத்தையும், அய்யன் - அசைவ உணவகதையும் தொடங்கியுள்ளார்.

சூரி துவங்கிய  இந்த இரு கிளைகளையும் பிரபல நடிகரும், சூரியின் நெருங்கிய நண்பருமான சிவகார்த்திகேயன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்துள்ளார். அங்கு சிவகார்த்திகேயனை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. 

sori