விஜய்யின் தளபதி 65 படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்!! அட.. அவருக்கு என்ன ரோல் பார்த்தீர்களா!!?

விஜய்யின் தளபதி 65 படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்!! அட.. அவருக்கு என்ன ரோல் பார்த்தீர்களா!!?


sivakarthickeyan-join-with-thalapahy-65-movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் நெல்சன் இயக்கத்தில் தனது 65வது படத்தில் நடிக்க உள்ளார். தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க ரஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மேலும் வில்லனாக நவாசுதீன் சித்திக் மட்டும் வித்யூத் ஜம்வால் இருவரும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தளபதி 65 படத்தில் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயனும் இணைய உள்ளதாக உற்சாகமான தகவல்கள் பரவி வருகிறது.

vijay

அதாவது, இதற்குமுன் சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப் குமாரின் கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு பாடலை எழுதியிருந்தார். பின்னர் அவரது இயக்கத்தில் தான் நடித்த டாக்டர் படத்திலும் செல்லம்மா, சோ பேபி ஆகிய பாடலின் வரிகளை எழுதி இருந்தார். இந்த நிலையில் தற்போது நெல்சன் அடுத்ததாக இயக்கவிருக்கும் தளபதி 65 படத்திற்கும் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுத உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.