சினிமா

அடுத்த ரஜினி இந்த நடிகரேதான்! பிரபல பாலிவுட் நடிகை உற்சாக பேட்டி! யார் அந்த நடிகர் தெரியுமா?

Summary:

sivakarthickeyan compared with raji by isha gopikar

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தனது காமெடியான பேச்சாலும், மிமிக்ரி திறனாலும் அனைவராலும் கவரப்பட்டவர் சிவகார்த்திகேயன். 

அதனை தொடர்ந்து அவர்  தமிழ் சினிமாவில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் மனம் கொத்தி பறவை, கேடி பிள்ளை கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், சீமராஜா என பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் தற்போது நயன்தாராவுடன் இணைந்து அவரது நடிப்பில் உருவான லோக்கல் திரைப்படம் வெளிவர தயாராகவுள்ளது.

sivakarthikeyan க்கான பட முடிவு

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து ரவிகுமார் இயக்கத்தில் ஏலியன்களை மையமாக கொண்ட ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் என் சுவாச காற்றே படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை இஷா கோபிகர்  18 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு  இஷா கோபிகர் அளித்த பேட்டியில் கூறுகையில், நான் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருவது ஏலியன் கதை படமாகும். இந்த படம் முழுவதும் கம்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்துடன் ஷுட்டிங்கும் நடந்து வருகிறது. 

isha koppikar க்கான பட முடிவு

மேலும் சிவகார்த்திகேயனை பார்க்கும் போது ரஜினிசாரை பார்ப்பது போல் உள்ளது. சிவகார்திக்கேயன்  நடவடிக்கை, பேச்சு, நடை, பார்வை எல்லாமே ரஜினி மாதிரியே உள்ளது என கூறியுள்ளார்.


 


Advertisement