ஆனந்த வெள்ளத்தில் நடிகர் சிம்பு...! அவரை சூழ்ந்த ரசிகர்கள்...!



simbu-speak-about-ccv

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, அரவிந் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எராப்பா என மிக பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இந்த படம் முதல் நாள் மட்டும் 8 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.  

இந்நிலையில் இந்த படம் திரைக்கு வரும்போது நடிகர் சிம்பு அவர்கள் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று நடிகர் சிம்பு சென்னை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். 

அந்த வகையில் நடிகர் சிம்பு ரசிகர்களிடம் இது எனக்கான வெற்றி இல்லை, இது ரசிகர்களுக்கான வெற்றி என்று கூறியுள்ளார். இயக்குனர் மணிரத்தினம் அவர்களுக்கும் மிக்க நன்றி. என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கு நன்றி நன்றி என்றும் கூறியுள்ளார். 

மேலும் நடிகர் சிம்பு அவர்கள் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேஷா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 
 

Latest tamil news