சினிமா

சிம்புவின் குரலில் அதிரடியாக வெளியான டேய் மாமே பாடல்! குவியும் லட்சக்கணக்கான லைக்குகள்! வைரலாகும் வீடியோ.

Summary:

Simbu

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பி பிரபலமானவர்கள் தான் மகத் மற்றும் யாசிகா ஆனந்த். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது நடித்துள்ள படம் இவன் தான் உத்தமன். இந்த படத்தினை மகேஷ் மற்றும் வெங்கட் இயக்கியுள்ளனர். 

மேலும் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த படத்தினை பரதன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியது. 

தமன் இசையமைக்கும் இந்த படத்தில் மகத்தின் நெருங்கிய நணபரான சிம்பு "டேய் மாமே.. " என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது. 


Advertisement