வாட்ஸ் அப் நம்பரை கேட்ட ரசிகருக்கு எடக்குமடக்காக ஸ்ருதி ஹாசன் அனுப்பிய பதிலை பார்த்தீர்களா! உஷாராதான் இருக்கணும் போல!!

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து உலக நாயகனாக வலம் வரும் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பின்னணி பாடகியாக இருந்த அவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். அவர் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
— shruti haasan (@shrutihaasan) April 14, 2021
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார். இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் மேடம், பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் போலீஸ் அவசர உதவி எண்ணான 100 என்ற நம்பரைக் கொடுத்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.