இது பொய்யான செய்தி! ரொம்ப அதிர்ச்சியா இருக்கு! மன உளைச்சலில் இயக்குனர் ஷங்கர் எடுத்த விடுத்த உருக்கமான வேண்டுகோள்!shankar-statement-about-his-arrest-warrant

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் பிரம்மாண்ட இயக்குனராக திரையுலகில் வலம் வந்தவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்த திரைப்படம் எந்திரன். 

இதில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எந்திரன் படத்தின் கதை, எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் அது தான் எழுதிய ஜூகிபா என்ற கதை எனவும், அதனையே இயக்குனர் சங்கர் படமாக்கிவிட்டதாகவும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

shankar

இதனை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் விசாரணை நடைபெற்ற போது இயக்குனர் ஷங்கரும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை எனவும், அதனைத் தொடர்ந்து 
இயக்குனர் சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை எழும்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது எனவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குனர் சங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த பொய்யான செய்தியை கண்டு, தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், இந்த விஷயம் குடும்பத்தார்களுக்கும், நல விரும்பிகளுக்கும் மன உளைச்சலை தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.