சினிமா

பெரிய விபத்திலிருந்து தப்பிய பிரபல தமிழ் நடிகர்! காயங்களுடன் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

Summary:

serial actor murali escaped from accident

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நிறம் மாறாத பூக்கள். இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் ராமகிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வருபவர் முரளி. தொகுப்பாளர் மற்றும் மாடலான  இவர் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் கையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது  போன்று உள்ளது.

serial actor murali escape the big accident

இதுகுறித்து அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் எனது கடவுளின் ஆசிர்வாதத்தாலும்,எனது நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் ஆசையினால் பெரிய விபத்திலிருந்து தப்பி உள்ளேன். என் மீது அதிக அன்பு காட்டிய என்னுடைய குடும்பம் மற்றும் எனது டீமுக்கு மிகவும் நன்றி. மேலும் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் நண்பர்களுக்கும் நன்றி . விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement