சினிமா

செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்தி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

Summary:

Semparuthi actor karthik sad life story

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஆபீஸ் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்தார். அதன்பின்னர் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

ஜோடி ஒன் நிகழ்ச்சிக்கு பிறகு 3 வருடங்களாக வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் கார்த்திக். இந்நிலையில் தனது கல்லூரி தோழி யாஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு 465 , நாலு பேருக்கு நல்லதுன்னு எதுவம் தப்பு இல்ல போன்ற படங்களில் நடித்தார். ஆனால், நடித்த படங்களும் சரியாக ஓடவில்லை. மேலும் படங்களில் நடிக்கும்போது தனக்கு ஏற்பட்ட அவமானங்கள்பற்றியும் ஒரு வீடியோவில் கூறியிருந்தார் கார்த்திக்.

இந்நிலையில் தனது காதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவருக்கும் இடையே விவாகரத்து ஆனது. இந்த நிலையில்தான் பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

செம்பருத்தி தொடர் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் நடிகர் கார்த்திக். இந்நிலையில் சோகங்கள் நிறைந்த வாழக்கையில் நேற்று தனது பிறந்தநாளை செம்பருத்தி தொடர் கதாபாத்திரங்களுடன் விமர்சியாக கொண்டாடினார் நடிகர் கார்த்திக்.


Advertisement